Tag Archives: ஓசூர்
அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஓசூர்
அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோபசந்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வெங்கடேஸ்வரர் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
ஓசூர் |
மாவட்டம் |
– |
|
கிருஷ்ணகிரி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியை விஜயநகர அரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஓசூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கோட்டகுட்டா கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஆடு மேய்த்து வந்தனர். இவர்கள் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்ததால் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க விரும்பினார்கள். வறுமையில் இவர்கள் வாடினாலும் ஆறு மாதத்திற்கொருமுறை திருப்பதி வெங்கடாஜலபதியை மட்டும் இவர்கள் தரிசிக்கத் தவறுவதில்லை. ஒரு நாள் பெருமாள் இவர்கள் கனவில் தோன்றி, “நான் தென்பெண்ணை நதிக்கரையில் சிலை வடிவில் உள்ளேன். என்னை எடுத்துச் சென்று வழிபடுங்கள்” என்று கூறியுள்ளார். இதன் படி சகோதரர்கள் இருவரும் நதிக்கரை சென்று அங்கிருந்த பெருமாளின் சிலையை எடுத்து ஒரு மாட்டுக்கொட்டத்தில் வைத்து வழிபட்டு வந்தனர்.
ஒரு முறை கோட்டகுட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் கிராமமே அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர். அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்தது. இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான வெங்கட்ரமணப்பா 1878ம் ஆண்டு இந்த சிலையை மலை மீது வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைத்து ஆண்டு தோறும் ஏப்ரல் 13ம் நாள் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து 1895ம் ஆண்டு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி, காளை சிலையை கண்டுபிடித்ததால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர்
அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
+91- 4344292 870, 98944 71638
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சந்திர சூடேசுவரர் | |
அம்மன் | – | மரகதாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பச்சைக் குளம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பத்ரகாசி | |
ஊர் | – | ஓசூர் | |
மாவட்டம் | – | கிருஷ்ணகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருகிறார்.அப்படி வரும்போது முத்கலர், உத்சாயனர் என்ற இரு பெரும் முனிவர்கள் இம்மலையில் தவமிருக்கின்றனர்.
தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பைப் பிடிக்க எண்ணினர். இருவரிடமும் மாட்டிக்கொள்ளாது இருக்க ஈசன் மறைந்து விடுகிறார்.