Tag Archives: உறையூர்
அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்-620 003 திருச்சி மாவட்டம்.
+91-431 – 2762 446, 94431 88716 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அழகிய மணவாளர் |
தாயார் | – | கமலவல்லி |
தீர்த்தம் | – | கமலபுஷ்கரிணி |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கோழியூர் |
ஊர் | – | உறையூர், திருச்சி |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும்படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, “கமலவல்லி” (கமலம்– தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாகக் கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச்சென்றார். அங்கு அரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.
+91 431 2761 869 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வெக்காளி அம்மன் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
புராணப் பெயர் | – | கோழியூர் |
ஊர் | – | உறையூர் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பராந்தக சோழன், உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ தேசத்தை ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூசை செய்து வந்தார்.
இறைவனுக்காக, அந்த நந்தவனத்தில் ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட, அந்த பூக்களைப் பறித்து சென்றான். சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே, தினமும் அர்சனின் ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களைப் பறித்துச் சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று,”மன்னா. நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்துச் செல்வது முறையா” என முறையிட்டார்.
மன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை.