Tag Archives: உடுமலைப்பேட்டை
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை– 642126 கோயம்புத்தூர் மாவட்டம்
+91 – 4252 221 048(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்:பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)
தல விருட்சம்: வன்னி , வில்வம், அரசு தீர்த்தம்:கிணற்றுநீர்
பழமை:500 வருடங்களுக்கு முன்
ஊர்:உடுமலைப்பேட்டை
மாநிலம்: தமிழ்நாடு
முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, “உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.
திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.