Tag Archives: ஈரோடு
மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.
+91-424- 2267578
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகிமாலீஸ்வரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மகிமாலீஸ்வரம், ஈரோடை | |
ஊர் | – | ஈரோடு | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இக்கோயிலின் தல வரலாறு குறித்து இருவேறு கதைகள் சொல்லப்படுகிறது. இலங்கை மன்னன் இராவணனின் வம்சா வழியினர் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். அவர்களில் மாலி, சுமாலி, மகிமாலி ஆகியோர் சிவன் குடிகொண்டிருக்கும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டு, தங்களுடைய நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சிவ பக்தர்கள் மாலைப் பொழுதில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. அவர்கள் மூவரும் இன்றைய ஈரோடு பகுதிக்கு வந்த போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.
அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு
அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.
காலை 6 – 12, மாலை 4.30 – 9 மணி வரை திறந்திருக்கும்.
வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த ரிஷிகள் சிலர் காவலர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள், காவலர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன் – இரண்யாட்சன், ராவணன் – கும்ப கர்ணன், கம்சன் – சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம்.