Monthly Archives: February 2012

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் அணைப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரைச் சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக, சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். இராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் ஸ்ரீராமஜெயம்எழுதுபவர்களைப் பல இன்னல்களிலிருந்து காக்கிறார். இராமாயணமோ அல்லது இராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு இராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 320 607 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஆத்தூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை, இராவணன் கடத்திச்சென்றபோது அவளைத்தேடி தென்திசை நோக்கி சென்ற இராமர் இவ்வழியாக சென்றார். நீண்ட தூரம் வந்த அவர், இத்தலத்திற்கு அருகில் இருக்கும் மலை மீது ஏறி, சீதாதேவி இருக்கிறாளா? என்று பார்த்தார். அங்கு சீதையை காணாததால் வருத்தத்துடன் சிறிது நேரம் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் தலைவன் இராமன் சோகமாக இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர், “இராமருக்கு எந்த வகையில் நாம் உதவி செய்வதுஎன வசிஷ்ட நதியின் கரையில் அமர்ந்து சிந்தனை செய்தாராம். இவ்விடத்தில் அவர், “வீரஆஞ்சநேயராககோயில் கொண்டுள்ளார். இராமர் அமர்ந்து சென்றதாக கருதப்படும் மலை இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.