Monthly Archives: February 2012

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.

+91 -4565 – 231 299 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவேங்கடமுடையான்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அரியக்குடி

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந்தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் எம்பெருமான்தோன்றினார். “தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்எனக் கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், “நாளை நீ மேற்கே செல். என் இடம் தெரியும்என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியை போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர்

அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

பேளூர்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள். அவள் மீனாட்சியைக் குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள்; தூங்க வைப்பாள்; தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்படியும், அவளுக்குத் தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள். அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக்கிறாள். அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம்தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள்.