Monthly Archives: February 2012
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2478 0436,93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுப்பிரமணியசுவாமி |
தலவிருட்சம் |
– |
|
வில்வம் |
தீர்த்தம் |
– |
|
சரவணபொய்கை |
ஆகமம் |
– |
|
சிவாகமம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
குன்றத்தூர் |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார்.
பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும். இவ்வாறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர் மாவட்டம்
+91- 416 – 221 2761, 94869 39198, 94438 00039 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்பிரமணியர், காங்கேயன் | |
உற்சவர் | – | சண்முகர் | |
தீர்த்தம் | – | சரவணப்பொய்கை | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | காங்கேயநல்லூர் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, “காங்கேயன்” என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.
அருணகிரியார் இத்தலம் வந்தபோது, சுவாமிக்குத் தயிர் சாத நிவேதனம் படைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணகிரியார், முருகனுக்கு படைத்த தயிர் சாதத்தை, அவர்களுக்கு படைத்தார். முருகனே இவ்வாறு ஆறு அடியார்களாக வந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் தற்போதும் இத்தலத்தில், முருகனுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஆறு அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.