Monthly Archives: January 2012

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியர்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

+91 – 422 – 234 0462, + 91- 4253 292 860

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடைதிறந்திருக்கும்.

மூலவர்

முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காகக் கீழே இறங்கியவர், இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலைஎன்றாகி விட்டது. ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,”இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில்தான் நான் சிலை வடிவில் இருக்கிறேன்என்றார். இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும், அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.