Monthly Archives: November 2011
முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | முக்தீஸ்வரர் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | காஞ்சிபுரம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்” என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். சலவைத்தொழிலில் இப்பேர்ப்பட்ட தத்துவம் உள்ளது.
தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார்.
மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை
அருள்மிகு மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை.
+91 94431 06262
காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவன் | |
அம்மன் | – | பார்வதி, சரஸ்வதி, லட்சுமி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அழகப்பன் நகர், மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் “செல்வ சித்தி விநாயகர்” எனப் பெயர் பெற்றுள்ளார்.