Monthly Archives: November 2011
நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி
அருள்மிகு நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி @ ஐயம்பேட்டைசேரி, வேலூர் மாவட்டம்.
சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் ஒரே திருக்கோயிலில் காணக் கிடைப்பது அபூர்வம். அப்படிப்பட்ட ஒரு திருக் கோயில் காவேரிப்பாக்கத்துக்கு அருகே அமைந்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்து வருவது காவேரிப்பாக்கம். சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத்துக்கு சுமார் 100 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்துக்கு வலப் பக்கம் காவல்நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலை சோளிங்கர் வரை நீளும். இடப் பக்கம் பிரமாண்ட ஏரியுடன் துவங்கும் இந்தச் சாலையில் வாழைத்தோப்புகள், நெல் வயல்கள் என சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால் வருகிறது ஐயம்பேட்டைசேரி எனும் கிராமம். இதை தியாமுகச்சேரி என்றும் அழைக்கிறார்கள். திசைமுகன்சேரி என்பது தியாமுகச்சேரி என ஆகி இருக்கிறது.
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்.
+91- 8221 – 226 245, 225 445, 227 239, 94487 50346, 99804 15727
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நஞ்சுண்டேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | பார்வதி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | முந்நதி சங்கமம் | |
ஆகமம் | – | காமீகம், காரணாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நஞ்சன்கூடு | |
மாவட்டம் | – | மைசூரு | |
மாநிலம் | – | கர்நாடகா |
விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இத்தலத்தில் ஒரு யாகம் நடத்தும்படியும், அப்போது அங்கு வரும் அசுரனை யாக குண்டத்தில் வீசும்படியும் கூறினார். அதன்படி தேவர்கள் யாகம் நடத்தினர். கேசியனும் அங்கு வந்தான். அவனை வரவேற்பது போலப் பாவனை செய்த தேவர்கள், சமயம் பார்த்து யாக குண்டத்தில் வீசி விட்டனர். அப்போது சிவன், அக்னி வடிவில் இருந்து அவனை அழித்தார். மகிழ்ந்த தேவர்கள், அவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டினர். சிவனும் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். விஷத்தின் வடிவமாக திகழ்ந்த அசுரனை அழித்ததால், “நஞ்சுண்டேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இந்த இலிங்கம் மறைந்துவிட்டது. தந்தை ஜமதக்னியின் சொல்லுக்காக, தாய் ரேணுகாதேவியைக் கொன்ற பாவம் போக்க இங்கு வந்தார் பரசுராமர்.