Monthly Archives: November 2011

இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர்

அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர், சென்னை.

+91 99410 82344

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இராமநாதீஸ்வரர்
அம்மன் சிவகாமசுந்தரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் போரூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், சிவனின் திருவிளையாடலால் சக்திதேவி தோல்வி அடைந்தாள். இதன்பின், ஒன்பது கங்கைத் துளிகளாக ஆழ்கடலில் அமிழ்ந்துவிட்டாள். அதனைச் சுற்றி 21 துளிகளாக சக்திக்கு சிவன் தரிசனம் கொடுத்தார். அதில் ஒரு துளி நீர் தரிசனம் தந்த இடமே, கைலாயகிரிபுரம்(தற்போதைய ராமேஸ்வரம்) என்பதாகும். இச்சம்பவத்திற்கு பிறகு, சக்திதேவி தன் அண்ணன் மஹாவிஷ்ணுவிடம் சென்று வரம் கேட்டாள். “காளிரூபத்தோடு சிவனை அடக்கி ஆளவேண்டும். பின்னர் சிவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்பதே அந்த வரம். “அவ்வாறே ஆகட்டும்என்ற விஷ்ணு, “சிவன் காஞ்சிபுரத்தில் இலிங்கவடிவில் இருக்கிறார். அங்கு போய் அவரை அடக்கியாளலாம்என்று சொன்னார். சக்தி அங்கு சென்றதும், மாயவனின் லீலையால் காஞ்சிபுரம் முழுவதுமே இலிங்கமயமாக இருந்தது. உண்மையான சிவன் யார் என்று தெரியாமல் சக்தி திணறினாள். அவளது கோபம் அதிகமானது. தான் கணவரை பிரிந்து வாடுவது போல், தன் அண்ணன் விஷ்ணுவும், இராம அவதாரம் எடுத்து மனைவியாகிய சீதையைப் பிரிந்து துன்புற வேண்டும். பின்னர் சிவனை வழிபட்டு சீதையை அடைய வேண்டுமென்று சாபம் கொடுத்தாள். இந்த சாபத்தின்படி, விஷ்ணு இராமாவதாரத்தின் போது சீதையைப் பிரிந்தார். அவளை தேடிச்சென்ற இராமன், இலுப்பைக்காடு சூழ்ந்த போரூர் என்னுமிடத்தில் ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். பூமிக்கடியில் இலிங்கம் இருப்பதை அறிந்து, அதை வெளிக் கொண்டுவர 48 நாட்கள் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு இலிங்க வடிவில் வந்தார். இராமன் லிங்கத்தைக் கட்டி அணைத்து அமிர்தலிங்கமாக மாற்றினார். இந்த சிவனுக்கு இராமநாத ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம்

அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 97901 16514

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இராமலிங்கசுவாமி
அம்மன் பர்வதவர்த்தினி
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இலங்கையில் சீதையை மீட்ட இராமபிரான், தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக, இங்கு 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு இலிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 இலிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, இராமரின் பெயரால் இராமலிங்கசுவாமிஎன்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த இலிங்கம் அவரது பெயரால் அனுமந்தலிங்கம்என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது.