Monthly Archives: November 2011
வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 99428 41439
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வாலீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | அறம்வளர்த்தநாயகி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சேவூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது.
சுக்ரீவனின் அண்ணன் வாலி, ஒரு தோஷ நிவர்த்திக்காக சில தலங்களில் சிவனை வழிபட்டார். அவ்வாறு அவரால் வழிபடப்பட்ட தலம் இது. வாலி வழிபட்டதால் இங்கு சிவன், “வாலீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார்.
சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விரு சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் இடது கையில் சேவல் வைத்திருக்கிறார். பொதுவாக முருகன் தலங்களில் சுவாமி, கையில் சேவல் கொடிதான் வைத்திருப்பார். இங்கு சேவலை வைத்திருப்பது வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் சிம்மம் இருக்கிறது. வள்ளி, தெய்வானை உடன் இருக்கின்றனர். இங்கு நடராஜர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இந்த மூர்த்தி மிகவும் விசேஷமானவர். விசேஷமான 5 தலத்து நடராஜர்களின் உருவத்தை ஒன்று சேர்த்து இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஆருத்ராதரிசன விழா சிறப்பாக நடக்கிறது.
வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம் மாவட்டம்.
+91- 4146- 231 159, +91-94432 93061
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வாலீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோலியனூர் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். “சப்தகன்னியர்” எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.