Monthly Archives: October 2011
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், விராதனூர்
அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், விராதனூர், மதுரை மாவட்டம்.
போன்: +91 452-550 4241, 269 8961
காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | விராதனூர் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
750 வருடங்களுக்கு முன், உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரு குடும்பத்தினர், தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தனர்.
வழியில் விராதனூரில் இளைப்பாறினர். தங்கள் குழந்தையை அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி உறங்க வைத்தனர். பெரியவர்களும் உறங்கி விட்டனர். விழித்த போது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை.
அட்டாள சொக்கநாதர் கோயில், மேலப்பெருங்கரை
அருள்மிகு அட்டாள சொக்கநாதர் கோயில், ராமேஸ்வரம் சாலை, மேலப்பெருங்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.
+91- 94420 47977, 99767 11487
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | அட்டாள சொக்கநாதர் | |
உற்சவர் | – | பிரதோஷ நாயனார் | |
அம்மன் | – | அங்கயற்கண்ணி | |
தல விருட்சம் | – | சரக்கொன்றை | |
தீர்த்தம் | – | கிணறு | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மேலப்பெருங்கரை | |
மாவட்டம் | – | ராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா? என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் முனிவர் ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது,”எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும், மதுரைத் தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்” என்றார்.