Monthly Archives: August 2011
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை-610104, திருவாரூர் மாவட்டம்.+91-92454 89881 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் |
உற்சவர் | – | பெரும் புறக்கடல் |
தாயார் | – | கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) |
தல விருட்சம் | – | மகிழ மரம் |
தீர்த்தம் | – | தர்ஷன புஷ்கரிணி |
பழமை | – | 2000-3000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | இலட்சுமி வனம் |
ஊர் | – | திருக்கண்ண மங்கை |
மாவட்டம் | – | திருவாரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி, இத்தலம் வந்து பெருமாளை அடையத் தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்துத் தர சொன்னார். பின் இலட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ, பெருமாள் இங்கு வந்து இலட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு “பெரும்புறக்கடல்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இலட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு “லட்சுமி வனம்” என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் “கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்” என்ற பெயரும் ஏற்பட்டது.
அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி
அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி-627108, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4635-250 119 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்) |
தாயார் | – | வரமங்கை தாயார் |
தல விருட்சம் | – | மாமரம் |
தீர்த்தம் | – | சேற்றுத்தாமரை |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | வானமாமலை என்னும் திருவரமங்கை |
ஊர் | – | நாங்குனேரி |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தபோது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். “மாசு கழுவப்பெற்றாய்” என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.