Monthly Archives: July 2011
அருள்மிகு லெட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால் பேட்டை
அருள்மிகு லெட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால் பேட்டை -605 003. புதுச்சேரி
+91- 413 226 0096 94431 04383
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | லெட்சுமி ஹயக்ரீவர் |
தாயார் | – | மகாலட்சுமி |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | முத்தியால்பேட்டை |
மாவட்டம் | – | புதுச்சேரி |
மாநிலம் | – | புதுச்சேரி |
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக, தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார். ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை “லட்சுமி ஹயக்ரீவர்” என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் – 627 401. திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 251 445 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேணுகோபாலன்(கிருஷ்ணசுவாமி) |
உற்சவர் | – | வேணுகோபாலர் |
தாயார் | – | ருக்மிணி, சத்யபாமா |
தல விருட்சம் | – | பாதிரி, பவளமல்லி |
தீர்த்தம் | – | ஹரிஹரதீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | புன்னைவனக்ஷேத்ரம் |
ஊர் | – | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருசமயம் பெருமாள் அவனது கனவில் தோன்றி, தாமிரபரணி நதிக்கரையில், புன்னை வனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். தான் கனவில் கண்டபடியே ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலருக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினான். சுவாமிக்கு கிருஷ்ணசுவாமி என்ற பெயரும் உண்டு. இக்கோயில், “கிருஷ்ணன் கோயில்‘ என்றால்தான் தெரியும்.