Monthly Archives: July 2011

அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில்

அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் – 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 246 7017, 94435 – 97388 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநறையூர் நம்பி
உற்சவர் இடர்கடுத்த திருவாளன்
தாயார் வஞ்சுளவல்லி
தல விருட்சம் வகுளம்(மகிழம்)
தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவிஎனப்பெயரிட்டு வளர்த்து வந்தார்.

திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார்.

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம்.

+91-435 – 243 0349, 94435 – 24529 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரங்கபாணி, ஆராவமுதன்
தாயார் கோமளவல்லி
தீர்த்தம் ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குடந்தை
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தைச் சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற ஆணின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களேஎனக் கோபப்பட்ட இலட்சுமி, கணவரைப் பிரிந்தாள்.

தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், “அம்மா. கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்என்றார்.