Monthly Archives: July 2011

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.

+91 4364 223395, 98424 23395 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8.00 முதல் 12.00 – மாலை 4.30 முதல் 8.00 வரை சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00 – மாலை 4.00 முதல் 8.00 வரை

மூலவர் ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் ஸ்ரீதயா லெட்சுமி
தீர்த்தம் விஸ்வரூபபுஷ்கரணி
புராணப் பெயர் கோடிஹத்தி
மாநிலம் தமிழ்நாடு

சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம்,”முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய். அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்எனவும் அந்த பாவம் தீர, காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்குஎனப் பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீமார்க்கசகாயேசுவரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமாள்.

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து செல்லலாம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம். ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.

அக்காலத்தில் இது போன்ற உள்ளடங்கிய கிராமங்களில் சாலை வசதிகள் மிகக் குறைவாக இருந்த நிலையில் எப்படித்தான் இது போன்ற அழகிய திருக்கோயில்களைக் கட்டினார்களோ என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது. கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)

தாயார் : ஸ்ரீ வேதநாயகி.

தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்

சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயனதிருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.