Monthly Archives: June 2011
அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர்
அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.
+91 4256 261 774 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – அந்தியூர்
மாநிலம்: – தமிழ்நாடு
கன்று ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண்,”நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன். என்னை இவ்விடத்திலேயே நிறுவனம் செய்து வழிபடுக” என்றாள் . அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது.
பெயர் விளக்கம்: பத்ரம் என்ற சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்ற பொருள்களைத் தருகிறது. பத்ரகாளி என்ற சொல்லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள் உண்டு.
அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர்
அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், சிவகங்கை மாவட்டம்.
+91- 4561-257 201, 257 213, 98424 59146
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – திருவெற்றியூர்
மாநிலம்: – தமிழ்நாடு
இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.
நாரதரும் சிவபெருமானும்:
இதனை அறிந்த நாரதர் நேராகக் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான்,”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்.