Monthly Archives: June 2011

அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்– 613001, தஞ்சாவூர் மாவட்டம்
**************************************************************************************

+91-93671 82045 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மூலவர்: – கோடியம்மன்

உற்சவர்: – பச்சைக்காளி, பவளக்காளி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – தஞ்சபுரி, அழகாபுரி

ஊர்: – தஞ்சாவூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

தற்போது கோயில் இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தகுதியின் காரணமாக வரம் கிட்டியது. வரத்தின் சக்தியால் தேவர்களைத் துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். எனவே இறைவன் தஞ்சபுரீசுவரர் என அழைக்கப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, மடிய மடிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான். இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக மாறினாள் (பவளம் சிவப்பு நிறம்). தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் அம்பாளின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள்.

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி-608 501, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
***********************************************************************************************************

+91 4144 – 223 500 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கிளியாளம்மன்

உற்சவர்: – கிளியாளம்மன்

தீர்த்தம்: – கிளி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெரியகுமட்டி

மாவட்டம்: – கடலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சிதம்பரத்தில் சிவன், அம்பிகை இருவருக்கும் நடனப்போட்டி நடந்தது. அம்பிகை தன் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவமாக்கி, சிவனுக்கு ஈடு கொடுத்து நடனமாடினாள். அப்போது, அம்பிகை கிளி வடிவம் எடுத்தாள். சிவன், நாட்டியம் ஆடியபடியே கிளியை கையால் தட்டினார். வலியைத் தாங்காத கிளி, சிதம்பரத்தின் எல்லையில் இங்கு வனத்தில் விழுந்தது. இவளே இங்கு தங்கினாள். கிளி வடிவில் தங்கியதால் இவளுக்கு கிளியாளம்மன்என்ற பெயர் ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. கோயில் எதிரே கிளி தீர்த்தம் உள்ளது. கோயில் வளாகத்தில் சப்தகன்னியர், பூரணா புஷ்கலாவுடன் அய்யனார் உள்ளனர்.
யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் இங்கு உள்ளது.