Monthly Archives: December 2009
அய்யனாரும், வை(பை)ரவரும்-தஞ்சை
தஞ்சைப் பெரியகோயில் காவல் தெய்வங்களான
******************************************************
அய்யனாரும், வை(பை)ரவரும்
*********************************
தஞ்சைப் பெரியகோயில் காவல் தெய்வங்களான அய்யனாரும், வை(பை)ரவரும் ஒரு ஓரத்தில் இருக்கின்றனர். நண்பர் திரு.வெளிகண்டார் கூறியதுபோல் இது அதனால் இருக்குமோ?
பைரவர்
திரு உத்திரகோச மங்கை
ஈசனின் திருநாமங்கள் பாதாள லிங்கேசுவரன், பிரளயாகேசுவரன், துரிதாபகன், கல்யாணசுந்தரன்.
அன்னையின் திருநாமங்கள் – மங்களேசுவரி, மங்களதாவினி, புட்பதனி, சுந்தர நாயகி, பூண்முலையாள், கல்யாண சுந்தரி
திரு = அழகு
உத்ரம் = உபதேசம்
கோசம் = இரகசியம்
மங்கை = பெண்
மூலவர் – மங்களநாதர்
சிறப்பு – சுயம்பு
அன்னை – மங்களேசுவரி
அற்புதம் – மரகத நடராசர்
தலமரம் – இலந்தை
தீர்த்தம் – அக்கினி தீர்த்தம்
பதிகம் – தேவாரம்
ஊர் – உத்திரகோச மங்கை
மாவட்டம் – இராமநாதபுரம்
புராணப் பெயர் – பதலி கிராமம்
மண்டோதரிக்குத் திருமணமாகாத காலம். அவள் ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள். ஈசன் அவளுக்குக் காட்சி தந்தபின்தான் அவளுக்குத் திருமணம் ஆயிற்று. அப்போது ஈசன் தனக்குத்தனே சூட்டிக்கொண்ட நாமம் மங்களநாதன்.