Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், S.கண்ணனூர்
அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், S.கண்ணனூர், திருச்சி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்பு
ஊர்: – S.கண்ணனூர்
மாநிலம்: _ தமிழ்நாடு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்து வந்த ஒருவர் இந்த பகுதியைக் கடக்கும் போது, குழந்தை ஒன்று, “நான் இங்குதான் இருக்கிறேன்” எனக் கூறும் குரல் மட்டும் கேட்டது. அவர் ஊரிலுள்ள மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த பகுதியில் புற்று ஒன்று தெரிந்தது. பராசக்திதான் குழந்தை வடிவில் வந்து தான் அங்கு குடி கொண்டிருப்பதை தெரிவித்துள்ளாள் என்பதை அறிந்த மக்கள் அங்கே அம்மனுக்கு திறந்த வெளியில் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வந்தனர்.
அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்-631 501.
+91 44 2722 2609
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – காஞ்சிபுரம்
மாநிலம்: – தமிழ்நாடு
அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். தேவர்கள் தங்களைக் காக்கும்படி பூவுலகுக்கு வந்து அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை அழித்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சியிலேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த திருச்(ஸ்ரீ)சக்ரம் நிறுவனம் செய்யப்பட்டது. இவள் “ஆதிகாமாட்சி” என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் “காளி கோட்டம்‘ என்றும் பெயருண்டு.