Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி – 605 111 புதுச்சேரி மாவட்டம்.
**************************************************************
+91-413-320 4288 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரத்யங்கிராதேவி(அபராஜிதா) |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | மொரட்டாண்டி |
மாவட்டம் | – | புதுச்சேரி |
மாநிலம் | – | புதுச்சேரி |
இராமரையும், இலட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மகா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, இராம, இலட்சுமண ர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.
இந்தத் தகவலை, இந்திரஜித்தின் சித்தப்பா, விபீடணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இந்த யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்குத் தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர் மாவட்டம்.
******************************************************************************************
+91 – 435- 246 3414, 94431 24347 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரத்யங்கிராதேவி |
தல விருட்சம் | – | ஆலமரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | அய்யாவாடி |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருமால் இராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். இராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார்.
தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக இராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.
காளி பக்தனான அவன், இராமனைப் போரில் தோற்கடிப்பதற்காக காளியை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளிலும் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.
அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனைப் போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் இராமனுக்குத் தெரிந்து விட்டது. இராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான இராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. இராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அருள் புரிந்தாள்.