Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம்

அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம்
*********************************************************************

+91 98654-09593 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரதா மாரியம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கோபிசெட்டிப்பாளையம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த வேப்பமரங்களின் நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அப்போது அசரீரி ஒலித்தது. “குழந்தைகளே. நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம்என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று; வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது. “குழந்தைகளே. நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன். கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமின்றி என்னை வழிபட எங்கிருந்து யார் வந்தாலும் காப்பாற்றுவேன்என்றது. சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். அதே நாளில், குறிப்பிட்ட இடத்தில், கோயில் கட்ட வேண்டும் என ஊர் பெரியவர்கள் கனவு கண்டனர். இதையடுத்து, 1917ல் சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.

முன்பு கிராமமாக இருந்த வீரபாண்டி, நகரமாக மாறி தற்போது கோபி செட்டிப்பாளையம் என்ற பெயரில் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்து உள்ளதால் டவுன் மாரியம்மன் கோயில்என்று பெயர் மாற்றம் பெற்றது.

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை – 643 001, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 2754 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல்  இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகா மாரியம்மன் , மகா காளியம்மன்
தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் உதகை
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.

அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர்.

அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.