Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை

அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 98658 04862, 94436 78579,+91-435-240 2660

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மஞான புரீஸ்வரர்

தாயார்

புஷ்பவல்லி

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கீழக் கொருக்கை

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும் கண்டு மிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது.

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 96267 65472, 94434 47826

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். பூராடம் நாட்களில் காலை 8 – 1 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆகாசபுரீஸ்வரர்

தாயார்

மங்களாம்பிகை

பழமை

2000 வருடங்களுக்கு முன்

ஊர்

கடுவெளி

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு, கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.