Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

ஆலயங்கள் – மாவட்டவாரியாக

ஆலயங்கள் மாவட்டவாரியாக

அரியலூர் இராமநாதபுரம்
கோயம்புத்தூர் சேலம்
தர்மபுரி சிவகங்கை
திண்டுக்கல் தஞ்சாவூர்
ஈரோடு தேனி
கடலூர் திருச்சி
காஞ்சிபுரம் திருவண்ணாமலை
கன்னியாகுமரி திருநெல்வேலி
கரூர் திருப்பூர்
கிருஷ்ணகிரி திருவள்ளூர்
மதுரை திருவாரூர்
நாகப்பட்டினம் தூத்துக்குடி
நாமக்கல் வேலூர்
நீலகிரி விழுப்புரம்
பெரம்பலுர் விருதுநகர்
புதுக்கோட்டை இதர மாநிலங்கள்

அருள்மிகு வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்

அருள்மிகு வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் – 626 125, விருதுநகர் மாவட்டம்.+91-4563 – 260 254 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வடபத்ரசாயி ஸ்ரீவில்லிபுத்தூர்
தாயார் ஆண்டாள்(கோதைநாச்சி)
தீர்த்தம் திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்லிபுத்தூர்
ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள். பின்னர் மாலையைக் கழட்டி பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “ஆழ்வார். கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டுஎன்றார். ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதையும் இறைவனையே நினைத்து ஏங்கித் தொழுதபடியே இருந்தாள். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்க சொல்ல, கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் . ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க இறைவனும் அதை ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். வைணவர்களின் முக்கிய தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.