Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில், அத்தாணி
அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில், அத்தாணி, ஈரோடு மாவட்டம்.
+91-98652 86606
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | ஆனந்தவல்லி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அத்தாணி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அத்தாணி ஒரு காலத்தில் அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. சடையப்பர் என்ற விவசாயி மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
ஒருநாள் புலி ஒன்று பசுவை கடுமையாக தாக்கியது. சடையப்பர் புலியுடன் சண்டை போட்டு விரட்டினார். இருப்பினும் காயமடைந்தார். வெகுநேரமாகியும் சடையப்பரும், பசுவும் வராததால் இவர்களைத் தேடி ஊரார் காட்டுக்கு புறப்பட்டனர். பசு அவரை சுமந்து கொண்டு, இப்போது கோயில் இருக்கும் இடத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இது கண்ட பசுவும் இறந்தது. ஊரார் மனம் வருந்தினர்.
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர்(சிறுகனூர்), திருச்சி மாவட்டம்.
+91-94438 17385,98949 26090
காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6- மதியம் 12.30 மணி.
மூலவர் | – | பிரம்மபுரீஸ்வரர் | |
அம்மன் | – | பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) | |
தல விருட்சம் | – | மகிழமரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பிடவூர், திருப்படையூர் | |
ஊர் | – | திருப்பட்டூர் | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். சிவன், தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன்,”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்” எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.