Category Archives: பெரம்பலூர்
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்.
+9144 2742 0836, 99441 17450, 99768 42058
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஏகாம்பரேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி அம்மன் | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஊர் | – | செட்டிகுளம் | |
மாவட்டம் | – | பெரம்பலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொறு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர்.
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.
*******************************************************************************************
+91- 4328 2325444 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.
தல விருட்சம்: – மருதமரம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – சிறுவாச்சூர்
மாநிலம்: – தமிழ்நாடு
சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறகின்றன. சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.
ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இந்த அம்மனைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.
மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித்தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.