Category Archives: புதுக்கோட்டை

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம்

+91-4322 -221084, 99407 66340 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியமூர்த்தி
உற்சவர் அழகியமெய்யர்
தாயார் உஜ்ஜீவனதாயார்
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் சத்ய புஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமய்யம்
ஊர் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

தல வரலாற்றினையே கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கும் கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில். ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி, பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

(நன்றி: தினமலர்)

மூலவர் ரங்கநாதர்
தாயார் கமலவல்லி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் மலையடிப்பட்டி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே அருகருகே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்கள்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர், திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது.

அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட, காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.