Category Archives: நாமக்கல்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

+91-4286 – 645 753, +91- 98424 41633

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்பிரமணியர் (பழநியாண்டவர்)

உற்சவர்

கல்யாண சுப்பிரமணியர்

தீர்த்தம்

கிணற்று தீர்த்தம்

ஆகமம்

சிவாகமம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

மோகனூர்

மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த கனியை தனக்குத் தராததால் கோபம் கொண்ட முருகன், கைலாயத்திலிருந்து தென்திசை நோக்கி வந்தார். சிவனும், பார்வதியும் அவரை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

அவரைப் பின்தொடர்ந்த அம்பிகை, “மகனே நில்என்று அழைத்தார். தாயின் சொல் கேட்ட முருகன், நின்றார். அவரிடம் பார்வதி, கைலாயத்திற்குத் திரும்பும்படி அழைத்தாள். ஆனால், முருகன் கேட்கவில்லை. தான் தனித்து இருக்க விரும்பியதாகக் கூறிய அவர் பழநிக்குச் சென்று குடிகொண்டார். இவ்வாறு முருகனை அம்பாள் அழைத்தபோது, இத்தலத்தில் நின்றதாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் பாலகனாக, “பால சுப்பிரமணியர்என்ற பெயரில் அருளுகிறார்.

பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இக்கோயிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளே இந்த படிக்கட்டுகளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

(நன்றி – தினமலர்)

மூலவர்

பாலசுப்ரமணியசுவாமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அலவாய்ப்பட்டி

மாவட்டம்

நாமக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

ஒருகாலத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய பக்தர் ஒருவர் பழநி முருகனை தரிசிக்க சென்றார். பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும் படியும் கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில், உனக்கு குழந்தைப் பிறக்கும் என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் இத்தலம் வந்து கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தார். அந்தப் திருப்பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர். முருகப்பெருமான் கந்தசஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். முருகனின் அருள்பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர், இந்த மலையில் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. கொங்கணச் சித்தர் நீண்டகாலம் தங்கி வழிபட்டதால், இந்த மலை, “கொங்கண மலைஎன அழைக்கப்பட்டு, தற்போது அலவாய் மலைஎனப்படுகிறது. முருகப்பெருமானின் சந்நிதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. இங்கேயுள்ள சுனை நீர் வற்றவே வற்றாதாம்.