Category Archives: நாகப்பட்டினம்
அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்
அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்– 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-256221 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புருஷோத்தமர் |
தாயார் | – | புருஷோத்தம நாயகி |
தல விருட்சம் | – | பலா, வாழை மரம் |
தீர்த்தம் | – | திருப்பாற்கடல் தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவன் புருஷோத்தமம் |
ஊர் | – | சீர்காழி–திருநாங்கூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை பார்வதி ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி, பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை இராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்கச் செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.
108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தலப் பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி இராமராக மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலப் பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார்.
அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்
அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்– 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-236 172 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பேரருளாளன் |
உற்சவர் | – | செம்பொன்னரங்கன், ஹேரம்பர் |
தாயார் | – | அல்லிமாமலர் நாச்சியார் |
தீர்த்தம் | – | நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம் |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருநாங்கூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி, தங்கத்தினால் மிகப்பெரிய பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்குத் தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலைக் கட்டியதால் இத்தலம் “செம்பொன்செய் கோயில்” என வழங்கப்படுகிறது.
108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் “அருளாளன்” என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் “பேரருளாளன்” ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.