Category Archives: நாகப்பட்டினம்
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91 – 4364 – 235 002 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | உத்வாகநாதர் | |
அம்மன் | – | கோகிலா | |
தல விருட்சம் | – | கருஊமத்தை, வன்னி, கொன்றை | |
தீர்த்தம் | – | சப்தசாகரம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி | |
ஊர் | – | திருமணஞ்சேரி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள், உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களைத் திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, ஈசனும் வரம் தந்தார்.
ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை, பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார். உமையும் சாப விமோசனம் வேண்டிப் பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து, பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் தோன்றி, உமையாளைத் திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-235 487 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐராவதேஸ்வரர் | |
அம்மன் | – | சுகந்த குந்தளாம்பிகை | |
தீர்த்தம் | – | ஐராவத தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி | |
ஊர் | – | மேலத்திருமணஞ்சேரி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
திருவேள்விக்குடியில் பரத முனிவர், சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேலத் திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். முனிவர், தடபுடலான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் “எதிர்கொள்பாடி” என அழைக்கப்பட்டது. தற்போது “மேலக்கோயில்” என்று அழைக்கிறார்கள். சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரைக் கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார். தாமரை மலரைப் புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றித் திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் “ஐராவதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் “சுகந்த குந்தளாம்பிகை” என்ற “மலர் குழல் நாயகி.” இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.
“வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே” என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளைப் போக்கி அருள்புரிவார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீரும். ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கருவறை யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.