Category Archives: திருவாரூர்

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 244 714, +91- 4366 -98658 44677 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்)
அம்மன் அஞ்சாட்சி (மயிமேவும் கண்ணி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சோடஷ (முக்கூடல்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல்
ஊர் திருப்பள்ளி முக்கூடல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

ஒரு முறை காசி மற்றும் இராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,”ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட இராவணன் உனது இறக்கையை வெட்டி விடுவான். நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது இராமபிரான் வருவார். நீ அவரிடம் இராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை தெரிவிப்பாய். அதைக்கேட்ட இராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்எனக் கூறினார். அதற்கு ஜடாயு,”இறைவா! நான் காசி இராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான் என்று கூறுகிறீர்கள். நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதுஎனக் கேட்டது. அதற்கு சிவன்,”நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்எனக் கூறினார். கோயில் எதிரில் உள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர். இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 276 113, +91-94862 78810 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தேவபுரீஸ்வரர் (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்)
அம்மன் மதுரபாஷினி, தேன் மொழியாள்
தல விருட்சம் கல்வாழை
தீர்த்தம் தேவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவனூர், திருத்தேவூர்
ஊர் தேவூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

இராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வக் கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள் மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வக் கலசங்கள் கிடைக்கச் செய்ததாக தல புராணம் கூறுகிறது.

வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி தேவகுருஎன அழைக்கப்படுகிறார். பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவவிஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.