Category Archives: திருவள்ளூர்
புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு
அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2902 1016, 99620 34729
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 – 1 மணி வரையில் நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | புஷ்பரதேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சொர்ணாம்பிகை | |
தல விருட்சம் | – | நாகலிங்கமரம் | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஞாயிறு | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவலோக சிற்பியான விசுவகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை
அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.
+91-9841557775
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஒத்தாண்டேஸ்வரர் | |
அம்மன் | – | குளிர்வித்த நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | தெப்பம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருமழிசை | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கரிகால் பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு இலிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், இலிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை “கைதந்தபிரான்” என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் “குளிர்வித்த நாயகி” என்றழைக்கப்படுகிறாள்.