Category Archives: தர்மபுரி
சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம்
அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம், தர்மபுரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுயம்புலிங்கேஸ்வரர் | |
ஊர் | – | அமானிமல்லாபுரம் | |
மாவட்டம் | – | தர்மபுரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
1860ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த சின்னவேடி செட்டியார் என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “இங்குள்ள தோப்பில் இலிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எனக்கு கோயில் கட்டு. இப்பகுதியை சிறப்பாக பாதுகாப்பேன்” என உத்தரவிட்டார். பதறி எழுந்த செட்டியார் மறுநாளே கோயில் கட்டுவதற்கான பணிகளைத் துவங்கினார். அவருக்குரிய தென்னந்தோப்பில் இறைவனைத் தேடி அலைந்தார். இலிங்கத்தைக் காணவில்லை. பிறகு ஒரு புளியமரத்தடிக்கு சென்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாம் என யோசனை செய்துகொண்டே ஒரு குச்சியால் எதேச்சையாக மண்ணை கிளறிக் கொண்டிருந்தார். அப்போது குச்சியில் ஏதோ தட்டுப்பட இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தோண்டிப் பார்த்தார். உள்ளே இலிங்கம் ஒன்று இருந்தது.
மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர்
அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர், தர்மபுரி மாவட்டம்.
+91-4342- 268640
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மல்லிகார்ஜூனேசுவரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தல விருட்சம் | – | வேலாமரம் | |
தீர்த்தம் | – | சனத்குமாரநதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தகடூர் | |
ஊர் | – | தகட்டூர் | |
மாவட்டம் | – | தர்மபுரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாசுபத வரத்தைப் பெறும் பொருட்டு அர்ச்சுனன் தவம் இருக்கிறான். அவன் தவத்தை சோதிக்க ஈசன், வேடன் ரூபம் கொண்டு வருகிறான். அப்போது அர்ச்சுனனுக்கும் வேடனுக்கும் சர்ச்சை நிகழ்ந்து சண்டை வருகிறது. “நீ என்ன பெரிய வேடனா?” என்று வில்லாலேயே சுவாமியை அர்ச்சுனன் அடிக்கிறான். பின்னர் வந்திருப்பது ஈசன்தான் என்பதை தெரிந்துகொண்டான் அர்ச்சுனன். பரத்வாஜ் ரிஷிகள் மூலம் தான் பெரிய பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து இங்கு வந்து தவம் செய்கிறான். இங்கு மல்லிகைப் பூ கொண்டு சிவபூஜை செய்ததால் சுவாமிக்கு மல்லிகார்ஜூனேசுவரர் என பெயர் வந்தது.
சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான் வடக்கிருந்து போகும்போது பூரி சித்தர் மூலம் இத்தலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.
அதியமான் மூலம் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.