Category Archives: கர்நாடகா
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்.
+91- 8221 – 226 245, 225 445, 227 239, 94487 50346, 99804 15727
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நஞ்சுண்டேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | பார்வதி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | முந்நதி சங்கமம் | |
ஆகமம் | – | காமீகம், காரணாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நஞ்சன்கூடு | |
மாவட்டம் | – | மைசூரு | |
மாநிலம் | – | கர்நாடகா |
விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இத்தலத்தில் ஒரு யாகம் நடத்தும்படியும், அப்போது அங்கு வரும் அசுரனை யாக குண்டத்தில் வீசும்படியும் கூறினார். அதன்படி தேவர்கள் யாகம் நடத்தினர். கேசியனும் அங்கு வந்தான். அவனை வரவேற்பது போலப் பாவனை செய்த தேவர்கள், சமயம் பார்த்து யாக குண்டத்தில் வீசி விட்டனர். அப்போது சிவன், அக்னி வடிவில் இருந்து அவனை அழித்தார். மகிழ்ந்த தேவர்கள், அவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டினர். சிவனும் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். விஷத்தின் வடிவமாக திகழ்ந்த அசுரனை அழித்ததால், “நஞ்சுண்டேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இந்த இலிங்கம் மறைந்துவிட்டது. தந்தை ஜமதக்னியின் சொல்லுக்காக, தாய் ரேணுகாதேவியைக் கொன்ற பாவம் போக்க இங்கு வந்தார் பரசுராமர்.
அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர்
அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர், கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள மளூர் நவநீதகிருஷ்ணன் கோயிலில் குழந்தைக்கண்ணன் தவழும் நிலையில் விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையில் வெண்ணையை உருண்டையாக பிடித்து கண்ணன் வைத்துள்ளார். இந்தக்கண்ணனின் பாதங்களில் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன. கழுத்தில் முத்து மாலையும் புலி நக மாலையும் அசைந்தாடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இடுப்பில் சலங்கை பட்டை ஒலி கேட்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கருநிற கல்லால் ஆன நகைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற குழந்தைக்கண்ணன் சிற்பத்தை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.