Category Archives: ஆந்திரப் பிரதேசம்
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளத்தியப்பர், காளத்தீசுவரர் | |
அம்மன் | – | ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பொன்முகலியாற்று தீர்த்தம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சீகாளத்தி | |
ஊர் | – | காளஹஸ்தி | |
மாவட்டம் | – | சித்தூர் | |
மாநிலம் | – | ஆந்தர பிரதேஷம் | |
பாடியவர்கள் | – | அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் |
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே! நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்.” போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார். வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.
பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி
அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர், ஆந்திரா.
+91- 8576-278 599
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர் | |
அம்மன் | – | மரகதாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 2000-3000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சுருட்டப்பள்ளி | |
மாவட்டம் | – | சித்தூர் | |
மாநிலம் | – | ஆந்திரா |
துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு கூறினார்.
திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது அனைத்து தேவர்களும்,”சிவபெருமானே. இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என மன்றாடினார்.