Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்
முக்தி கிடைக்க
முக்தி கிடைக்க
முக்தி பெற வேண்டும் என்பதே மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஒரே ஆசை. ஆனால் முக்தி எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி அடைவது என்பது தெரியாது. ஆனால் அடைவது மட்டும் வெகு கடினம் என்று சொல்லக் கேள்வி.
முக்தி அடையத் தகுதிகள்:
திருவாரூரில் பிறக்கவேண்டும். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசிக்கவேண்டும். திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைக்கவேண்டும். காசியில் இறக்கவேண்டும்.
பிறப்பது, இறப்பது நம்மிடம் இல்லை. சிதம்பரம் வழியாக 50 தடவை சென்றாலும், இறங்கி, நடராஜரைப் பார்க்க இயலாது; அவ்வளவு வேலை. அட; சரிதான்; அண்ணாமலையையாவது நினைக்கலாமென்றால் முடியவில்லை. நமக்கு ஆயிரத்தெட்டு கவலைகள். ஆனால் முக்தி மட்டும் வேண்டும்.
ஆன்மிகவாதிகள் முக்தியைப் பற்றி என்னென்னவோ கூறுவார்கள். சாமானியனுக்குப் புரியாது. அவர்கள் சொல்லும் வழியில் செல்லுவதும் முடியாது. முக்தி எப்படிக் கிட்டும்?
கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று, “அடுத்த பிறவி எனக்கு வேண்டாம்” என்று மனமுருக வேண்டிக்கொண்டால் முக்தி கிட்டுமென பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆத்மநாதசுவாமி | திருப்பெருந்துறை – சிதம்பரம் | கடலூர் |
ஏகாம்பரநாதர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
பரமபதநாதர் | பரமேஸ்வர விண்ணகரம் | காஞ்சிபுரம் |
அற்புத நாராயணன் | திருக்கடித்தானம் | கோட்டயம் |
அவிநாசியப்பர் | அவிநாசி | கோயம்புத்தூர் |
பட்டீஸ்வரர் | பேரூர் | கோயம்புத்தூர் |
பாலசுப்ரமணியன் | சிறுவாபுரி | சென்னை |
விஸ்வநாதர் | கண்ணாபட்டி | திண்டுக்கல் |
அரங்கநாதப் பெருமாள் | ஸ்ரீரங்கம் | திருச்சி |
அழகிய நம்பிராயர் | திருக்குறுங்குடி | திருநெல்வேலி |
அருணாச்சலேஸ்வரர் | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
முக்தீஸ்வரர் | சிதலப்பதி | திருவாரூர் |
சிவலோகத்தியாகர் | ஆச்சாள்புரம் | நாகப்பட்டினம் |
முல்லைவன நாதர் | திருமுல்லைவாசல் | நாகப்பட்டினம் |
காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
காளமேகப்பெருமாள் | திருமோகூர் | மதுரை |
வாலீஸ்வரர் | கோலியனூர் | விழுப்புரம் |
இலட்சுமி நரசிம்மர் | பூவரசன்குப்பம் | விழுப்புரம் |
மாங்கல்ய தோஷம் நீங்க
மாங்கல்ய தோஷம் நீங்க
மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகத் தோஷங்கள்; இன்னும் எத்தனையோ தோஷங்கள்.
மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8 ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
கணவரின் உயிருக்கு ஆபத்து, எனவே மாங்கல்ய தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி, பொறியியல் கல்லூரி மாணவியை, கடலூரில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்து, 6.5 பவுன் சங்கிலியை மோசடி செய்ததாக, போலிச் சாமியாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாரியம்மனாக ரேணுகாதேவி திருஅவதாரம் எடுத்தபோது வெட்டுவாணத்தில்தான் முதன்முதலாக அம்மன் எழுந்தருளினாள் என்று கூறுகிறார்கள். மாங்கல்ய தோஷம், திருமணத் தடங்கல் இருப்பவர்கள் ஆலய விருட்சத்தில் மஞ்சள் தாலியைக் கட்டினால் தோஷம் நீங்கும், திருமணத் தடங்கல் விலகும். இத்திருத்தலம் சென்னையிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜவ்வாது மலைச்சாரலில், பாலாற்று நதியின் தென்கரையில் அமைந்திருக்கிறது.
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே இன்னல் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) | இருகூர் | கோயம்புத்தூர் |
வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) | கீழவாசல் | தஞ்சாவூர் |
பிராணநாதேசுவரர் | திருமங்கலக்குடி | தஞ்சாவூர் |
அபயவரத ஆஞ்சநேயர் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
கல்யாணராமர் | மீமிசல் | புதுக்கோட்டை |
எல்லீஸ்நகர் |
மதுரை |
|
கெங்கமுத்தூர், பாலமேடு |
மதுரை |
|
பிரளயநாதசுவாமி | சோழவந்தான் | மதுரை |
விஸ்வநாதர் | சாத்தூர் | விருதுநகர் |