Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்-விருத்தாசலம்

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

+91- 4143-230 232, 93621 51949 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் கொளஞ்சியப்பர்
தல விருட்சம் கொளஞ்சிமரம்
தீர்த்தம் மணிமுத்தாறு
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மணவாளநல்லூர்விருத்தாசலம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். “விருத்தம்என்றால் பழமைஎன்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கழுகாசல மூர்த்தி (முருகன்)
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கழுகு மலை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு, இராமனிடம், தன்னால் என் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே; இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது?” என்றார். அதற்கு இராமன், “நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. சம்பாதி முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.

அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் கழுகுமலைஎனப் பெயர் பெற்றது.