Category Archives: முருகன் ஆலயங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில், மதுரை மாவட்டம்.
+91- 452-247 0228 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்பிரமணிய சுவாமி தம்பதியர் | |
அம்மன் | – | வள்ளி, தெய்வயானை | |
தல விருட்சம் | – | நாவல் | |
தீர்த்தம் | – | நூபுர கங்கை, சிலம்பு ஆறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சோலைமலை (அழகர்கோயில்) | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஓளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஓளவைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார். ஒரு முறை ஓளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஓளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “என்ன பாட்டி. மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பைப் போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்ததோஷப்பட்ட ஓளவை “வேண்டும்” என்றார். உடனே முருகன்,”பாட்டி. தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த ஓளவை ஏதும் புரியாமல்,”சுட்ட பழத்தையே கொடேன்” என்றார். சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஓளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,”பாட்டி. பழம் மிகவும் சுடுகின்றதா? ஆறியவுடன் சாப்பிடுங்கள்” என்று கூறி சிரித்தான்.
அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை
அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, புஞ்சைபுளியம்பட்டி வழி, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-4254 – 287 418, 98659 70586
(மாற்றங்களுக்குட்பட்டவை)
திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.
மூலவர் |
– |
|
ஓதிமலையாண்டவர் |
உற்சவர் |
– |
|
கல்யாண சுப்பிரமணியர் |
தலவிருட்சம் |
– |
|
ஒதிமரம் |
தீர்த்தம் |
– |
|
சுனை தீர்த்தம் |
ஆகமம் |
– |
|
சிவாகமம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
இரும்பறை |
மாவட்டம் |
– |
|
கோயம்புத்தூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப் படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்குப் பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம், “ஓதிமலை” என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்” என்றும் பெயர் பெற்றார்.