Category Archives: பரிகார தலங்கள்
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-4364-256 424 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுவேதாரண்ய சுவாமி | |
அம்மன் | – | பிரமவித்யாநாயகி | |
தல விருட்சம் | – | வடவால், கொன்றை, வில்வம் | |
தீர்த்தம் | – | முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன்பு | |
புராணப் பெயர் | – | ஆதிசிதம்பரம், திருவெண்காடு | |
ஊர் | – | திருவெண்காடு | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் |
பிரம்மனிடம் பெற்ற வரத்தால், மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து, சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவரை சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை “ஆதி சிதம்பரம்” என்பார்கள்.
சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி – திருவலிதாயம், சென்னை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி – திருவலிதாயம், சென்னை மாவட்டம்.
+91 – 44 – 2654 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் | |
அம்மன் | – | ஜெகதாம்பிகை | |
தல விருட்சம் | – | பாதிரி, கொன்றை | |
தீர்த்தம் | – | பரத்வாஜ் தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவலிதாயம் | |
ஊர் | – | பாடி – திருவலிதாயம் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின்(வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். இலிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து, பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் “திருவலிதாயம்” என்றும், சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
வியாழன், தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.