Category Archives: நவகிரகத் தலங்கள்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.
+91- 452-234 9868, 234 4360 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் | |
அம்மன் | – | மீனாட்சி, அங்கயற்கண்ணி | |
தல விருட்சம் | – | கடம்ப மரம் | |
தீர்த்தம் | – | பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம் | |
ஊர் | – | மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், திருநாவுக்கரசர் |
மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.
மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.
நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்குப் பக்கத்தில் தடாதகை இருந்ததை காணக் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.
அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை
அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 – 325 425 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அபிமுக்தீஸ்வரர் (பிரிய நாதர்) | |
அம்மன் | – | அபினாம்பிகை (ஏழவார் குழலி) | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | சரவணப்பொய்கை | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பெருவேளூர், காட்டூர் ஐயன்பேட்டை | |
ஊர் | – | மணக்கால் ஐயம்பேட்டை | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம், “இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்” என வேண்டினாள். கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,”கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்” என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு, தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் தான் “லலிதா திரிசதை” பாடப்பட்டது.
சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில், கீவளூர், பெருவேளூர், திருவிடைக்கழி ஆகியன. அதேபோல், முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து, தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் “பெருவேளூர்” எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.