Category Archives: தோஷ நிவர்த்தி தலங்கள்
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர். திருவாரூர் மாவட்டம்.
+91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளை நாதேஸ்வரர் | |
அம்மன் | – | அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள் | |
தல விருட்சம் | – | பாரிஜாதம் | |
தீர்த்தம் | – | துர்வாச, ஞான, பிரம்ம, உருத்ர தீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்களர் | |
ஊர் | – | திருக்களர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் இலிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு. இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் “பிரமதாண்டவ தரிசனம்” தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி “திருக்களர்” ஆனது. இதனால் இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில்தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.
நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை “திருக்களர் ஆண்டவன்” என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர், காலவ முனிவர் வழிபட்ட தலம்.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, (திருப்பாதாளீச்சுரம், பாம்பணி), திருவாரூர் மாவட்டம்.
+91- 93606 85073 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகநாதர் | |
அம்மன் | – | அமிர்தநாயகி | |
தல விருட்சம் | – | மாமரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம், நாகதீர்த்தம், பசுதீர்த்தம், தேனு தீர்த்தம், உருத்ரதீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பாதாளேச்சரம், பாம்பணி | |
ஊர் | – | பாமணி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் பலம் பொருந்திய தன் தலையால் மேருமலையை அழுத்தி பிடித்து கொண்டு, உடலால் மலையை சுற்றிக்கொண்டது. எனவே வாயு பகவான் மலையை அசைக்க முடியாமல் தோற்றது. இந்த கோபத்தால் வாயு காற்றை அடக்க சகல ஜீவராசிகளும் காற்றின்றி பரிதவித்தது. தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க போட்டி மீண்டும் நடந்தது. தேவர்கள் ஆதிசேஷனின் வலிமையை சற்று குறைக்க, 3 தலைகளை மட்டும் தளர்த்தியது. வாயு மூன்று சிகரங்களை பெயர்த்தது. தான் தோற்றதால், மனவேதனை அடைந்த ஆதிசேஷன், மனநிம்மதிக்காக சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டது. பாம்பு உருவாக்கிய இலிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.