Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 4366-269 965, 94433 51528

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணப்பெருமாள்

உற்சவர்

ஆதிநாராயணப்பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

வன்னி

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சமீபனம், வன்னிமரக்காடு

ஊர்

எண்கண்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம் (வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி, “முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், “மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில், தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும்கூறினார். “மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா நடத்த வேண்டும்என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன் பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான். இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப்படுகிறது.

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர்

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91 44 262 46790, 94444 62610 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விண்ணவராய பெருமாள்

உற்சவர்

ஸ்ரீனிவாசன்

தாயார்

கனகவல்லி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பழைய அம்பத்தூர்

மாவட்டம்

திருவள்ளூர்

மாநிலம்

தமிழ்நாடு

இந்தப் பகுதியை ஆட்சி செய்த நவாப் ஒருவர், தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தார். கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுப்பொருள் ஏதும் கிடைக்காமல் பசியில் களைத்துப் போனார். அவருடன் வந்த வீரர்களும் பசி தாளாமல், ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவர்களது கண்ணில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கே ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வரும்படி வீரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் பெருமாள் கோயிலைக் கண்டனர். அர்ச்சகரிடம் தங்கள் நிலையைக் கூறினர். சுவாமிக்கு நைவேத்யம் செய்த வரகரிசி பிரசாதத்தை வீரர்களிடம் அர்ச்சகர் வழங்கினார். சுவாமிக்கே இவ்வளவு எளிய உணவா என எண்ணிய நவாப், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்டார். பஞ்சம் காரணமாக வரகரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வதாக அர்ச்கர் தெரிவித்தார். அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்து, நைவேத்யம் செய்ய பணஉதவியும் செய்வதாக வாக்களித்தார். அப்போது, வரகரிசி பிரசாதம் உயர்ரக அரிசி பிரசாதமாக மாறியது. கண் எதிரில் நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட நவாப், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.