Category Archives: வகையிடப்படாதவை
திருமால் ஆலயங்கள் – வகையிடப்படாதவை
திருமால் ஆலயங்கள் – வகையிடப்படாதவை |
||
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில் | திருவிடந்தை, மகாபலிபுரம் | திருவள்ளூர் |
|
|
|
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை(திரு விடவெந்தை), மகாபலிபுரம்
வராகப்பெருமாள் காலவ முனிவரின் 365 மகள்களையும் தினம் ஒரு கன்னியாக மணந்தருள்புரிந்தார். அதனால் இவருக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இப்பெருமாள், சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் கோவளத்தையடுத்து 2 கி.மீ. தொலைவில் அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாளாக கோயில் கொண்டு காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில், மூலவரான ஆதி வராகர், தமது இடது தொடையில் மகாலக்குமியை இருத்தி, அணைத்தபடி காட்சியளிப்பதால், இத்தலத்திற்குத் திரு விடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டு பிறகு மருவி திருவிடந்தையானது.
திருவாகிய இலக்குமியை இடபாகத்தில் இருத்தியுள்ள எந்தை என்பதே, திருவிட வெந்தை என்ற திருநாமத்தின் பொருள். இதே ஆதிபிரான் தனது வலது பாகத்தில் இலக்குமியை அமர்த்தி, அணைத்தவாறு காட்சியளிக்கும் தலம், இத்தலத்திற்கு அருகிலேயே இருப்பது, பலருக்கும் தெரிந்திராது. அவர்தான் திருவலவெந்தை ஆதிபிரான்.
மகாபலிபுரம் பழைய கலங்கரை விளக்கம் பகுதியில் கோயில் கொண்டுள்ளார் திருவலவெந்தை ஆதிபிரான்.