Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்-கள்ளிக்குடி

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்கள்ளிக்குடி, மதுரை மாவட்டம்.

+91 452-269 3141, 98432- 93141 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால சுவாமி

தாயார்

பாமா, ருக்மணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குராயூர்கள்ளிக்குடி

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆண்ட வென்று மாலையிட்ட வீரபண்டியன், பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப விரும்பினான். அவனது நாடு விரிந்து பரந்திருந்தது. அவன் மதுரைக்கும் அடிக்கடி சென்று வருபவன். கள்ளிக்குடியை அடைந்த நேரத்தில் அவனுக்கு ஸ்ரீமந் நாராயணனின் நினைவு மனதில் எழுந்தது. இதை நாராயணனின் சித்தமாகவே உணர்ந்த அவன், நினைவு எழுந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் அமைத்தான். சுவாமிக்கு வேணுகோபாலன் என்று பெயரிட்டான். அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோர் கோயிலை விரிவுபடுத்தினர்.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது. கருவறையில், புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா, ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி எழுந்தருளியுள்ளார். சிறிய தோற்றம் உடையவராக இருந்தாலும் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய பலனை அளிக்கிறார். ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றிருப்பது போல், இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரமும் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில், விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில், விளாச்சேரி, மதுரை மாவட்டம்.

+91- 97888 54854 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பட்டாபிராமர்

தாயார்

சீதை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

விளாச்சேரி

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

சீதையை மீட்க வாரைப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காண வேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக இராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் இலட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் இராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் இராமரின் பட்டபிஷேக காலத்தில், இராமருக்கு வலப்பகம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர். இராமரின் ஜாதகம் அமைவது போல் ஒருவருக்கு அமைவது மிகவும் அரிது. இவரது படத்தை வீட்டில் வைத்து வழிபட்டாலே போதும்.