Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 – 98945 69543 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதர்
அம்மன் சோமகலாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் சோம தீர்த்தம், கருட தீர்த்தம், சடாயு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழையாறை வடதளி, ஆறைவடதளி
ஊர் கீழ்பழையாறை வடதளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்க, தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று, இத்தலத்தின் வழியே வந்தான். இதைக்கண்ட அசுரர்களுக்கும், கருடனுக்கும் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன், தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது. சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.


சோழர் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு பார்த்த சன்னிதி. எதிரில் குளம் இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்கை உருவமும் அழகுடையன.
பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது.

அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்

அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2416976 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பட்டீசுவரர்
அம்மன் பல்வளைநாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் ஞானவாவி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
ஊர் திருப்பட்டீசுவரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் வந்து, ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. அது தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் இலிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய இலிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார்.

பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம்என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.