Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை
அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+9-4366-270 073 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர் | |
அம்மன் | – | உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருச்சாத்தமங்கை, கோயிற்றிருச்சாத்தமங்கை | |
ஊர் | – | சீயாத்தமங்கை | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார். அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி, அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி, அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி, அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.
கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, இலிங்கோற்பவர், பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் இரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார். கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல்
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91 4366 270 823 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | இரத்தினகிரீசுவரர், மாணிக்கவண்ணர் | |
அம்மன் | – | வண்டுவார்குழலி | |
தல விருட்சம் | – | வாழை(மருகல்) | |
தீர்த்தம் | – | லட்சுமி (அ) மாணிக்க தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மருகல், திருமருகல் | |
ஊர் | – | திருமருகல் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
இறைவனின் திருநாமம் “மாணிக்க வண்ணர்” என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய உரு என்பதாம். மாணிக்கவண்ணரது பாணத்தை நோக்கின் உண்மை புலப்படும். சிவலிங்கத்தின் பீடங்கள் சதுரமானவை. அதிலும் சிறப்பாக சுவாமி தோள்பக்கத்தில் பாணத்தின் அடிப்பாகத்தில் ஒரு வெட்டு காணப்பெறும். அது குசசேது மகாராஜா என்பர் இங்கு வந்தபோது இத்தலம் காடாக இருந்ததாம். காடு வெட்டித் திருத்தும்போது மண்வெட்டி திருவுருவில் தாக்கியதாகவும், இரத்தம் பெருகியதாகவும், அரசனறிந்து சுற்றிலும் வெட்டிப்பார்த்து இறையுருவைக் கண்டு, ஏங்கித் தெளிந்து, ஆலயம் எடுப்பித்தான் என்றும் வரலாறு கேட்கப் பெறுகின்றது.
இறைவன் திருநாமம் வடமொழியில் இரத்தினகிரீசுவரர் என்று வழங்குகிறது. சிவலிங்கத்திருவுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று. இங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது.