Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி
அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, மாவூர் வழி, திருவாரூர் மாவட்டம்.
+91- 4367 – 237 707, 94438 06496 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | இரத்தினபுரீஸ்வரர் (மாணிக்கவண்ணர், கரீநாலேசுரர்) | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | மாவிலங்கை | |
தீர்த்தம் | – | சூரிய, சந்திர தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | நாட்டியத்தான்குடி | |
ஊர் | – | திருநாட்டியத்தான்குடி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
இரத்னேந்திர சோழ மன்னனும், அவனது தம்பியும் அவர்களது தந்தையார் விட்டுச்சென்ற இரத்தினங்களை மதிப்பிட்டுப் பிரித்து கொள்ள முயற்சித்தனர். இரத்தினத்தை மதிப்பிடுபவர்கள் பலர் வந்து இரத்தினங்களை மதிப்பிட்டும் இவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. குழப்பம் நீடித்தது. கடைசியில் இருவரும் இத்தலத்து இறைவனிடம் வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே இரத்தின வியாபாரியாக வந்து இரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்து கொடுத்ததுடன் நாட்டையும் பிரித்து கொடுத்துவிட்டு மறைந்தருளினார் என்பது வரலாறு. இதன் காரணமாகவே இத்தல இறைவன் “இரத்னபுரீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.
அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா
அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4369-237 507, 237 438 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர் | |
அம்மன் | – | மங்கள நாயகி | |
தல விருட்சம் | – | நெல்லிமரம் | |
தீர்த்தம் | – | பிரம, சூரிய தீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநெல்லிக்கா | |
ஊர் | – | திருநெல்லிக்கா | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
மூலவர் நெல்லிவனநாதர். அம்மன் மங்களநாயகி. தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண்டியதைத் தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. ஒரு முறை துர்வாசரை மதிக்காததால், அவர்,”நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்” என சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத்தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்தபின் தேவலோகத்திற்கு சென்றன. அவற்றின் வழியாக வந்த நெல்லி மரங்கள் காலங்காலமாக இறைவனுக்கு நிழல் தந்து தொண்டு செய்யும் பாக்கியத்தை பெற்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் “நெல்லிவனநாதர்” என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய தலமும் “திருநெல்லிக்கா” என அழைக்கப்பட்டது.