Category Archives: பாடல் பெறாதவை
பூமிநாதர் திருக்கோயில், திருச்சி
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், திருச்சி
+91 431 2711 3360
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பூமிநாதர் | |
உற்சவர் | – | ||
அம்மன் | – | ஜெகதாம்பிகை | |
தல விருட்சம் | – | மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள் | |
தீர்த்தம் | – | ||
ஆகமம்/பூஜை | – | ||
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ||
ஊர் | – | திருச்சி | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு, ஒருமுறை நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்தும், பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. அப்போது, மகான் ஒருவர் மன்னனைச் சந்தித்தார். அவனிடம் மன்னன் தன் பிரச்னையைத் தெரிவித்தான். மகான் அவனது அரண்மனை கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகச் சொல்லி, சிவனை வழிபட பிரச்னை தீரும் என்றார். எனவே, மன்னன் இலிங்க பிரதிட்டை செய்து வழிபட்டான். இவருக்கு “பூமிநாதர்” என பெயர் சூட்டப்பட்டது. இதன்பிறகு பிரச்னை தீர்ந்தது. பிற்காலத்தில் அம்பிகை சன்னதி எழுப்பப் பட்டது. இவளை ஜெகதாம்பிகை என்பர்.
பூமிநாதர் திருக்கோயில், செவலூர்
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.
+91 4322 221084, 97869 65659
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பூமிநாதர் | |
அம்மன் | – | ஆரணவல்லி | |
தீர்த்தம் | – | பிருத்வி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | செவலூர் | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்துத் தரவேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.