Category Archives: சப்தஸ்தான தலங்கள்
அருள்மிகு புட்(ஷ்)வனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி
அருள்மிகு புட்(ஷ்)வனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி, (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 – 4365 – 322 290, 94865 76529 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புட்(ஷ்)பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் | |
அம்மன் | – | சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பந்துருத்தி | |
ஊர் | – | மேலைத்திருப்பூந்துருத்தி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
முற்காலத்தில் அகத்தியரின் கமண்டலத்தைக் காகம் கவிழ்க்க, அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன.
இந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு, அவர் அருளால், காவிரியைக் கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அவ்வாறு காவிரி கிழக்கு நோக்கி ஓடுகையில், முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாகச் செய்தி. காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும், மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்ததாலும் இந்நிலப்பரப்பை “பூந்துருத்தி” என்று வழங்கிவந்தனர். இதனை “பொருத நீர்வரு பூந்துருத்தி” என்று அப்பர் கூறுகிறார். இதுபோல் ஆற்றிடையில் உண்டாகும் நிலப்பகுதிக்கு “துருத்தி” என்று பெயர். காவிரியில் கிழக்கே உண்டாகிய மற்றொன்றிற்கு “துருத்தி” (குற்றாலம்) என தற்காலம் வழங்குகின்றது. ஆதலால் நில அமைப்பு நோக்கி இப்பெயர் ஏற்பட்டது எனலாம்.
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில், திருப்பந்துருத்தி
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில், திருப்பந்துருத்தி, வழி – திருக்கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 – 4365 – 284 573, 322 290 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் | |
அம்மன் | – | ஞானம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம், ஆலமரம்(தற்போதில்லை) | |
தீர்த்தம் | – | காவிரி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலம்பொழில் | |
ஊர் | – | திருவாலம் பொழில் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
இத்தலக் கல்வெட்டு இறைவனைத் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிக்கிறது. அப்பரும் தம் திருத்தாண்டகத்தில், “தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே” என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் – பரம்பைக்குடி என்றும்; கோயில் – திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது. கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது. இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோயில் பிரகாரத்தில், மூலவிநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர். இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.